விவசாயிகளின் மூன்றாம் நிலை முக்கிய தேவையாக நாம் கருதுவது உற்பத்தியை பெருக்குவதாகும். உற்பத்தியை பெருக்குவதில் மிகச்சரியான நுண்ணூட்டங்கள், பயிர்களின் வளர்ச்சி, மற்றும் சிறப்பான மகரந்த சேர்க்கை ஆகியவை முக்கியமான காரணிகளாகும்.
தாவரங்களில் வேர்களின் பாதுகாப்பினை அபிமானும், தாவரங்களின் முழுமையான வளர்ச்சியை ஆர்பிக்ஸ்சும் உறுதி செய்வதால் உற்பத்தியின் திறனை மேம்படுத்தும் பொருட்டு ஒரு சிறந்த இடுபொருளாக உருவாக்கப்பட்டது தான் எஃப் எல் 77.
எஃப் எல் 77 முற்றிலும் மலர்களின் ஆரோக்கியம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் செயல்படுகிறது. தாவரங்களின் மொட்டுக்கள் உருவாகுவதற்கும் மொட்டுக்கள் மலர்வதற்கும் எஃப் எல் 77ஐ பயன்படுத்தலாம். தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் வரவை அதிகரித்து மகரந்த சேர்க்கையை அதிகரிக்கிறது.
இதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு அதன் தரமும் உயர்கிறது. காலநிலை மாற்றங்களை முழுமையாக எதிர்கொள்ளும் வகையில் தாவரங்களை ஊக்கப்படுத்துகிறது. தாவரங்களின் மூலம் பெறும் உற்பத்தி அதிகரிப்பதோடு தொடர்ந்து உற்பத்தியை பெறக்கூடிய கால அளவும் அதிகரிக்கிறது. இதனால் லாபமும் அதிகரிக்கிறது.
அதாவது குறிப்பிட்ட காலநிலைகளுக்கு சற்று முன்னரே சரியான, தரமான உற்பத்தியை பெறும் போது சந்தை மதிப்பு அதிகரித்து விவசாயிகள் அதிக லாபத்தை பெற முடியும். விவசாயிகள் பெறக்கூடிய விளைச்சலில் சீரான வடிவம் மற்றும் எடையினை உறுதி செய்கிறது.
இதனால் விவசாயிகள் பலமுறை அறுவடை செய்யும் செலவு குறைந்து ஒரே நேரத்தில் சீரான விலையினை பெறுகின்றனர் இதன் மூலம் சந்தை மதிப்பு வேறுபடுவதால் ஏற்படும் நஷ்டம் குறைவதோடு வேலையாட்கள் மற்றும் இதர செலவுகளும் குறைகிறது.
எஃப் எல் 77 ஆனது முக்கியமாக பெண் பூக்களின் உற்பத்தியை அதிகரித்து பூ உதறிதல், பூக்கள் கருகுதல், இலை உதறுதல், காய் புள்ளி, பிஞ்சு உதறுதல், பிஞ்சு கருகுதல், போன்ற நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துகிறது. எஃப் எல் 77 தாவரங்களின் பேன், கள்ளிப்பூச்சி, அஸ்வினி பூச்சி போன்ற பூச்சிகளையும் ஒட்டுண்ணிகளையும் முழுமையாக கட்டுப்படுத்துகிறது.














