விவசாயிகளின் இரண்டாவது முக்கிய தேவையாக இருப்பது பயிர்களின் வளர்ச்சி.
முதல் கட்டமாக வேர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அபிமான் பயன்படுத்திய பிறகு அதனை தொடர்ந்து ஆர்பிக்ஸினை பயன்படுத்த வேண்டும்.
ஆர்பிக்ஸ் ஆனது தாவரங்களின் செழிப்பான வளர்ச்சிக்கும் தரமான உற்பத்திக்கும் உறுதியான பாதுகாப்பிற்கும் சிறந்த இடுபொருளாகும். ஆர்பிக்சில் உள்ள பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை எடுத்து தாவரங்களுக்கு கொடுக்கிறது.
ஆர்பிக்சில் உள்ள என்.பி.கே தாவரங்களுக்கு தேவையான மணிச்சத்து சாம்பல் சத்து தலைச் சத்து ஆகியவற்றை நிறைவாக வழங்குகிறது.
ஆர்.பிக்ஸில் உள்ள பூஞ்சைகள் தாவரங்களுக்கு தீமை செய்யக் கூடிய பூஞ்சைகளை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.
ஆர்பிட்சையில் உள்ள துத்தநாகம் தாவரங்களுக்கு தேவையான இண்டோஸ் அசிட்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. தாவரங்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.
ஆர்பிக்சில் உள்ள அமினோ அமிலம் தாவரங்களின் வளர்ச்சி ஊக்கியாக செயல்பட்டு சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. தாவரங்களுக்கு தேவையான கனிமங்களை எளிதாக அவற்றுக்கு கிடைக்கச் செய்கிறது.
ஆர்பிக்சில் உள்ள கியூமிக் அமிலம் மண்ணின் இயற்பியல் தன்மையை நிலை நிறுத்தி பலப்படுத்துகிறது. ஒளிச்சேர்க்கை திறனை அதிகரித்து தாவரங்களுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு உணவளிக்கிறது. மண்ணில் உள்ள சத்துக்களை தாவரங்கள் எளிதாக எடுக்கும் வகையில் இலகுவாக மாற்றுகிறது.
ஆர்பிக்சில் உள்ள இரும்புச்சத்து சுவாசித்தல் மற்றும் ஒளிச்சேர்க்கை போன்ற நிகழ்வுகளை சீர் செய்து ஆக்சிஜன் பரிமாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் தாவரங்களின் தழைச்சத்து பயன்பாடு அதிகரித்து உயிர் வேதி மாற்றங்கள் சிறப்பாக மேம்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தாவரங்களில் ஏற்படும் இலை வெளிர் நிற நோயை கட்டுப்படுத்துகிறது.
தாவரங்களில் ஏற்படும் இலை புள்ளி, சிற்றிலை நோய், இலை மஞ்சள் நிறத்தில் மாறுதல், போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் இண்டோஸ் அசிட்டிக் அமிலம் உற்பத்தியாக இது உதவுகிறது. இலை கருகல், இலை அழுகல், இலை உதிர்தல், பூ உதிர்தல் தண்டு அழுகல், காய் வளர்ச்சி குறைதல், நுனி கருகல் போன்ற தாவர வளர்ச்சி சார்ந்த நோய்களை முற்றிலும் கட்டுப்படுத்துகிறது.
உற்பத்தியை அதிகரித்து, காயின் நிறம், பருமன் மற்றும் தரத்தை முழுமையாக மேம்படுத்துகிறது. மண்ணின் பி.ஹெச் அளவை சமன் செய்து உற்பத்தியின் கால அளவை மேம்படுத்துவதோடு பெறக்கூடிய உற்பத்தியையும் அதிகரிக்கிறது.













